ஒரே நிறுவனத்தில் 84 வருஷங்கள்; கின்னஸ் சாதனை - முதியவர் மரணம்
கின்னஸ் உலக சாதனை படைத்த 102 வயது முதியவர் காலமானார்.
கின்னஸ்
பிரேசிலை சேர்ந்தவர் வால்டர் ஒர்த்மேன். இவர், புரூஸ்க்யூ நகரில் இயங்கி வரும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 1938ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். படிப்பை பாதியில் விட்டுவிட்டு,
குடும்ப கஷ்டத்திற்காக தனது 15வது வயதில் இந்த நிறுவனத்தில் பேக்கிங் வேலையில் சேர்ந்துள்ளார். அவ்வாறு தொடர்ந்து அதே நிறுவனத்தில் 84 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு கொடுத்த நிறுவனம், சம்பளத்தையும் உயர்த்தி கொடுத்து வந்தது.
முதியவர் மரணம்
இதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு தனது 100வது வயதில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது, அவர் 84 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதற்காக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். பின் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர்,
தனது 102வது வயதில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மரணத்திற்கு அவரது நிறுவனம் இரங்கல் தெரிவித்ததோடு, அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.