கின்னஸ் சாதனை படைத்த 'உலகின் மிகவும் வயதான' நாய் 31 வயதில் மரணம்!

Guinness World Records Death Portugal World
By Jiyath Oct 24, 2023 05:16 AM GMT
Report

உலகின் மிகவும் வயதான நாயாக அறியப்பட்ட போபி, தனது 31 வயதில் மரணமடைந்துள்ளது.

உலகின் மிகவும் வயதான நாய்

ஒரு நாயின் இயல்பான ஆயுட்காலம் என்பது 12 முதல் 14 வயது வரை மட்டுமே. ஆனால் சில சிறிய வகை நாய்கள் மட்டுமே 15 ஆண்டுகள் வரை வாழும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

கின்னஸ் சாதனை படைத்த

அந்த வகையில் உலகின் மிகவம் வயதான நாயாக அறியப்பட்ட போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த போபி (Bobi) என்ற நாய், கடந்த அக்டோபர் கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

அந்த நாயின் அதிகாரப்பூர்வ வயது 31 ஆண்டுகள் மற்றும் 163 நாட்கள் ஆகும். அந்த நாய் Purebred Rafeiro do Alentejo என்ற வகையை சேர்ந்த, சிறு கால்நடைகள் மற்றும் கோழிகளை பாதுகாக்க மனிதர்களாக வளர்க்கப்படும் ஒரு நாய் இனமாகும்.

கரை ஒதுங்கிய விசித்திர கடற்கன்னி? நிபுணர்கள் சொல்வது என்ன? நீடிக்கும் மர்மம்!

கரை ஒதுங்கிய விசித்திர கடற்கன்னி? நிபுணர்கள் சொல்வது என்ன? நீடிக்கும் மர்மம்!

கின்னஸ் சாதனை

பொதுவாக 12 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும் அந்த இனத்தில், போபி மட்டும் அதிக ஆண்டுகள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து வந்துள்ளது. போபி அதன் வாழ் நாள் முழுவதும், சுற்றிலும் உள்ள காடுகளிலும், விளைநிலங்களிலும் சங்கிலிகள் அல்லது கயிறு கட்டப்படாமல் சுதந்திரமாக சுற்றிவந்ததாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த

மேலும், இதற்கு முன்பாக கடந்த 1910ம் ஆண்டு பிறந்து 1939ம் ஆண்டு வரை சுமார் 29 ஆண்டுகள் வாழ்ந்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Bluey என்ற நாய் தான் அதிக காலம் வாழ்ந்த நாயக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு போபி (Bobi) அந்த சாதனையை முறியடித்து உலகின் வயதான நாயாக மாறி கின்னஸ் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.