உலகின் மிக விலை உயர்ந்த பர்கர்; கின்னஸ் புத்தகத்தில் இடம் - விலை தெரியுமா..?
'தி கோல்டன் பாய்' பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தி கோல்டன் பாய்
நெதர்லாந்து நாட்டிலுள்ள 'டி டால்டன்ஸ்' என்ற உணவகத்தின் உரிமையாளரும், பிரபல சமையல் நிபுணருமான ராபர்ட் ஜான் டி வென் என்பவர் 'தி கோல்டன் பாய்' என பெயரிடப்பட்டுள்ள பர்கரை உருவாக்கியுள்ளார்.
இது தங்க இலைகள், குங்குமப்பூ, வாக்யு மாட்டிறைச்சி மற்றும் பல சத்தான, விலை உயர்ந்த உணவு பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த பர்கரின் விலை 5,000 யுரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) ஆகும். 'தி கோல்டன் பாய்' பர்கர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
வருமானம்
இந்த பர்கரின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபர்ட் ஜான் டி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உணவு பொருட்களின் பட்டியலில்,
தனது பர்கரும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதை சாதனைக்காக மட்டும் உருவாக்கவில்லை. இந்த பர்கர் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் வசதியற்ற குடும்பங்களுக்கு உதவியது" என்று தெரிவித்துள்ளார்.