வெட்டுக்கிளி, புழு, பூச்சி டிஷ்கள்...உணவு பிரியர்களை கவரும் உணவக மெனு பட்டியல்!
30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களை உணவு மெனு பட்டியலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புழு, பூச்சி டிஷ்
சிங்கப்பூரில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பூச்சிகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படும். இவை, மனிதர்கள் உணவாக உட்கொள்ளவோ அல்லது உணவை உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு தீவனம் அளிப்பற்காகவோ பயன்படுத்தப்படும்.
இதன் பிறகு, அந்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருந்து பூச்சிகளை வாங்கும் பணிகளை செய்து வருகின்றனர். எனினும், இவ்வகை பூச்சிகள், உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு கட்டாயம் உட்பட்டு இருக்க வேண்டும்.
ஒருவேளை உணவு பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத பூச்சிகள் இருந்தால் அவை விற்பனைக்கு அனுமதிக்கப்படாது. இந்த சூழலில், விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய மெனுக்கள் உதவும் என உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்கள் நம்பிக்கையாக உள்ளனர்.
பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி... - சமையலறையில் நெண்டிய புழு, பூச்சிகள்... பிரபல புகாரி ஓட்டலுக்கு சீல் - அதிகாரிகள் அதிரடி
மெனு பட்டியல்
ஒரு சில உணவு விடுதிகள் 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களையும் மெனுவில் அறிமுகமாகியுள்ளது. உணவு விடுதிகளிடம் தினமும் 5 முதல் 6 முறை தொலைபேசி வழியே வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கின்றனர்.
அவர்கள், பூச்சிகளின் டிஷ்கள் பற்றியும், எப்போது அவற்றை ஆர்டர் செய்யலாம் என்பன போன்ற விசயங்களை கேட்க தொடங்கி விட்டனர் என கடல்உணவுக்கான விடுதியின் தலைமை செயல் அதிகாரி கூறுகிறார்.
மேலும், அவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்திருக்கின்றனர். அவர்கள், தங்களுடைய ஒரே டிஷ்ஷில் எல்லா பூச்சிகளும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.