உலகிலேயே அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் எது தெரியுமா? டிக்டாக் இல்லை!
உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், எக்ஸ் வலைதளம் போன்றவற்றை உலகளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக் இடம்பெற்றிருந்தது. தற்போது அதனை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.

திருமணத்தை மீறிய உறவு.. குடும்பத்தை தவிக்கவிட்டு இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை செய்த நபர் - அதிர்ச்சி!
அதிக பதிவிறக்கம்
அதன்படி, இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெரும் வளர்ச்சிக்கு ரீல்ஸ் அம்சம் முக்கிய காரணமாக உள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக டிக்டாக்கைத் மிஞ்சும் வகையில் இன்ஸ்டாகிராமில் அதிகமான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இதற்கு ரீல்ஸ் தான் காரணம் என சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு மேலாளர் ஆபிரகாம் யூசெப் கூறியுள்ளார்.