திருமணத்தை மீறிய உறவு.. குடும்பத்தை தவிக்கவிட்டு இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை செய்த நபர் - அதிர்ச்சி!
ஒருவர் தனது காதலுக்காக குடும்பத்தை விட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
ஹரியானா மாநிலம், கூர்கானை சேர்ந்தவர் விக்ரம், இவர் மருந்தியல் துறையில் வர்த்தகம் செய்து வருகிறார். அதே துறையில் இவர் பகுதி நேர மேற்படிப்பு ஒன்றையும் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
சமீபத்தில் அந்த பெண்ணிற்கு பிறந்தநாள் என்று கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் அரை எடுத்து தங்கியிருந்தார். அங்கு அறையில் நுழைந்த சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது, இதனால் அந்த பெண் கடும் கோபத்துடன் வெளியேறினார்.
தற்கொலை
இந்நிலையில், அந்த பெண்ணை பிரிந்த துயரத்தில் அரை மணிநேரம் அந்த அறையில் காத்திருந்தார், பின்னர் அவர் இன்ஸ்டாகிராம் லைவில் வந்துள்ளார். பலர் ஆர்வத்துடன் அந்த லைவில் கலந்துகொண்டனர். அவர் எதுவும் பேசாமல் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபொழுது அவர் அங்கே இறந்து கிடந்தார்.
இவரது தற்கொலைக்கு காரணம் அந்த 20 வயது மாணவி என்று கூறியுள்ளார், திருமணமான நபர் என்று அறிந்தும் அந்தப் பெண் விக்ரமுடன் நெருங்கிப் பழகியதாகவும், வீடியோ ஒன்றைக் காட்டி விக்ரமை பிளாக் மெயில் செய்து வந்ததாகவும் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மாணவியை தேடி வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் லைவில் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.