12 நாட்களா டிராஃபிக்கில் சிக்கிய மக்கள்; உணவு, தண்ணீர் இல்ல.. எங்கே தெரியுமா?
12 நாட்கள் டிராஃபிக் நீடித்தது என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?
நீண்ட நேர ட்ராஃபிக்
சீனாவில், 2010ல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மங்கோலியாவிலிருந்து பெய்ஜிங்கிற்கு நிலக்கரி மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரிகளால் இந்த பயங்கரமான நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல் மொத்தம் 12 நாட்கள் நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே முடங்கியது.
முக்கிய சம்பவம்
பெய்ஜிங் மற்றும் திபெத்தை இணைக்கும் நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதாக கூறப்பட்டது. ஒவ்வொரு வாகனமும் ஒரு நாளைக்கு சராசரியாக 1 கிலோ மீட்டர் தூரம்தான் பயணித்துள்ளது.
சில வாகனங்கள் 5 நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருந்துள்ளது. லாரிகளை இரவில் திசை திருப்பியதன் மூலம் 12 நாட்கள் கழித்து போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.