வேறொரு பெண்ணுடன் பைக்கில் பயணம் - மனைவியிடம் வசமாக சிக்கவைத்த டிராஃபிக் கேமரா!
கணவர் வேறொரு பெண்ணுடன் ஸ்கூட்டரில் சென்ற விவரம் டிராஃபிக் கேமரா மூலம் அம்பலமாகியுள்ளது.
விதிமீறல்
கேரளா, இடுக்கியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர், தனது தோழியுடன் ஸ்கூட்டரில் ஹெல்மெட் போடாமல் சென்றுள்ளார். அப்போது, அந்த நபரின் போக்குவரத்து விதிமீறல் குறித்த விவரங்கள்,
போக்குவரத்துக் காவல்துறையால் அவரது வாகன எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மனைவி வாகனத்தின் உரிமையாளராக இருந்ததால், அவரது செல்போனுக்கு அபராதம் செலுத்தவேண்டிய விவரங்கள் மற்றும் ஆதாரமாக புகைப்படமும் இணைக்கப்பட்டிருக்கிறது.
சிக்கிய கணவன்
ஆனால், கணவனுடன் பயணித்தது வேறொரு பெண் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேட்கையில், அது யாரோ ஒரு பெண் என்றும், தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு லிஃப்ட் மட்டுமே கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பாத மனைவி கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது கைகலப்பாக மாறியுள்ளது.
தொடர்ந்து, மனைவி தன்னையும், தனது 3 வயது குழந்தையையும் கணவர் தாக்கியதாக புகாரளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.