வேறொரு பெண்ணுடன்...தடுத்த மனைவி மீது காரை ஏற்றிய பிரபல தயாரிப்பாளர்!

Bollywood
By Sumathi Oct 28, 2022 05:59 AM GMT
Report

காரில் வேறொரு பெண்ணுடன் சென்ற தயாரிப்பாளரை அவரது மனைவி தடுத்ததால் அவர் மீது காரை ஏற்றியுள்ளார்.

சினிமா தயாரிப்பாளர்

பிரபல பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர், மும்பையில் உள்ள அந்தேரியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் உள்ள கார் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய காரை வெளியே எடுத்துள்ளார்.

வேறொரு பெண்ணுடன்...தடுத்த மனைவி மீது காரை ஏற்றிய பிரபல தயாரிப்பாளர்! | Film Producer Kamal Kishore Mishra Arrested

அங்கு கமலின் மனைவி யாஸ்மின் அவரைத் தேடி சென்றுள்ளார். அப்போது, அவரது காருக்குள் வேறொரு பெண் இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த யாஸ்மின், கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பரபரப்பு புகார்

இதனால் ஆத்திரம் அடைந்த கமல் மிஸ்ரா, காரை யாஸ்மின் மீது ஏற்றிவிட்டு சென்றார். இதில் யாஸ்மினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் கணவர் மீது யாஸ்மின் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் யாஸ்மின் மீது காரை ஏற்றியது தெரியவந்தது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.