ஓட்டல் அறையில் தகாத உறவில் கணவன் - செருப்பால் சரமாரியாக தாக்கிய மனைவி!
கள்ளக்காதலியுடன் ஓட்டல் அறையில் இருந்த கணவனை, அவரது மனைவி செருப்பால் தாக்கியுள்ளார்.
தகாத உறவு
டெல்லியைச் சேர்ந்தவர் தினேஷ் கோபால். இவர் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் ஐசியூ பிரிவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது கள்ளக்காதலியுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இதைப் பற்றி அவரது மனைவிக்கு தெரிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் தனது மகன், மகள், உறவினர்கள் என அனைவரையும் அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஓட்டல் அறைக்குள் சென்ற மனைவி, கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
செருப்பால் அடித்த மனைவி
உடனே, தனது செருப்பைக் கழற்றி கணவனையும், காதலியையும் சரமாரியாக தாக்கினார். அதனால், இருவரும் கைகூப்பி மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனாலும், கோவத்தில் தொடர்ந்து தாக்கி, காதலியின் கணவருக்கும் போன் மூலம் அழைத்து சம்பவத்தை கூறியுள்ளார்.
குழந்தைகளிடம், மனைவி அடிக்கையில் காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார். அதற்கு அவர்கள் நீங்கள் எங்கள் அப்பா என கூறுவது கேவலமாக உள்ளது என கூறியுள்ளனர். பல மாதங்களாகவே இவ்வாறு வேலை இருப்பதாகக் கூறி கொண்டு காதலியுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
அதனையும் தற்போது அவரது மனைவி கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீஸார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.