நடுரோட்டில்... பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்திய கொடூரம்! நடந்தது என்ன?

Viral Video Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Aug 14, 2022 06:07 AM GMT
Report

நடுரோட்டில் அந்தப் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தகாத உறவு

மத்திய பிரதேசம், கஜாபுவா என்கிற பகுதியில் வசித்து வரும் அந்த இளம் பெண் கடந்து எட்டு மாதங்களுக்கு முன்னதாக கணவரை விட்டு பிரிந்து சென்று அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

நடுரோட்டில்... பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்திய கொடூரம்! நடந்தது என்ன? | By Tearing The Woman Clothes In Uttar Pradesh

இந்த நிலையில் முகேஷிடம் ஏற்பட்ட பிரச்சணையால் அவரை விட்டு பிரிந்து மீண்டும் தன் கணவரிடமே வந்து வாழ தொடங்கி இருக்கிறார். தனது கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் தனது கூட்டாளிகள் ஐந்து பேரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் முகேஷ்.

கொடூர தாக்குதல்

அப்போது அந்த பெண் முகேஷுடன் வாழ முடியாது என்று மறுத்து விட்டதால் 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை வீட்டிற்கு வந்து தர தர என்று சாலைக்கு இழுத்து சென்றிருக்கிறார்கள்.

பின்னர் வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அதற்கு அந்த பெண் மறுக்க அந்த பெண்ணை நடுரோட்டில் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்து உடைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.

வீடியோ வைரல் 

பிறகு அங்கிருந்த அப்பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இதை தடுக்க, அவர்களையும் கொடூரமாக தாக்கி இருக்கின்றார்கள். அக்கம் பக்கத்தினர் இதைப்பார்த்தும் ஓடிவந்து தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள்.

அந்த வீடியோ முன்னாள் முதல்வர் கமல்நாத் கவனத்திற்கு சென்றது. அவர் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களின் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இரண்டு பேரை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.