வெடிக்கப்போகும் 3ஆம் உலகப்போர்; அதுவும் இப்படியா? தீர்க்கதரிசி சலோமி எச்சரிக்கை!
மூன்றாம் உலகப்போர் குறித்து தீர்க்கதரிசி சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீர்க்கதரிசி சலோமி
பிரேசிலைச் சேர்ந்தவர் சித்த மருத்துவரான அதோஸ் சலாமி(36). எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்து கணித்து வருகிறார்.
இந்த கணிப்புகளால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் "வாழும் நாஸ்ட்ராடாமஸ்" என்றும் பரவலாக அழைக்கப்படுகிறார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய நேர்காணல் ஒன்றில், மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர்?
இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும். இனி நடக்கப் போகும் நவீன போரில் மனிதகுலம் மாற்றத்தின் விளிம்பில் இருக்கிறது. இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர் என்றுத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே இவர் சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.