போருக்கு நடுவில் வெடித்த பூகம்பம்.. என்னால இங்க வாழவே முடியாது - விவாகரத்து கேட்ட அதிபர் மனைவி!
மாஸ்கோவில் வாழ இயலாது என்று கூறி சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் மனைவி அஸ்மா அல் ஆசாத் விவாகரத்து கோரியுள்ளார்.
அதிபர் மனைவி
கடந்த 2011-ம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராகத் புரட்சி வெடித்தது. இதில் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போரில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக துருக்கி ஆதரவுடன் எச்டிஎஸ் கிளர்ச்சிப் படை போர் நடத்தியது. இந்த சுழலில் சிரியாவிற்கு , ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவைச் சந்தித்தது.
முடிவுக்கு வந்த 50 ஆண்டு குடும்ப ஆட்சி; அதிபர் தப்பி சென்ற விமானம் மாயம்? - சிரியாவில் நடப்பது என்ன?
விவாகரத்து
மேலும் முக்கிய நகரங்களை கைபற்றியாதால் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். இந்த நிலையில், மாஸ்கோவில் வாழ இயலாது என்று கூறி சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் மனைவி அஸ்மா அல் ஆசாத் விவாகரத்து கோரி மனு அளித்துள்ளார்.
அஸ்மா பிரிட்டிஷ் சிரிய குடும்பத்தில் பிறந்தவர் ஆவர். இவர் 2000 ஆம் ஆண்டு சிரியா சென்றார். அப்போது அவருக்கு வயது 25 ஆகும். அங்கு பஷார் அல் ஆசாத்தின் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.