ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து - உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

France Fire Paris
By Karthikraja Dec 24, 2024 04:06 PM GMT
Report

 ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஈபிள் டவர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசிஸ் ஈபிள் டவர்(eiffel tower) அமைந்துள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

eiffel tower fire

நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏறத்தாழ 12,000 பேர் அந்த பகுதியில் கூடியுள்ளனர்.

தீ விபத்து

இந்நிலையில், இன்று(24.12.2024) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள் டவரில் முதல் தளத்திற்கும் 2ஆவது தளத்திற்கும் இடையே மின்தூக்கியில் தீ விபத்து ஏற்பட்டது.

eiffel tower fire

தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12,000 சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

இதனால் ஈபிள் டவர் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஈபிள் டவர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.