ஒரு இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம் - உலகின் பணக்கார பூனை இதுதான்!
உலகின் மிகவும் பணக்கார பூனை குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
நளா
பூனைக் குட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சத்தை சம்பாதிக்கிறது. அந்த பூனையின் பெய்ர நளா. பூனைக்குட்டி இதுவரை ரூ.895 கோடியை சம்பாதித்து, உலகின் பணக்கார பூனையாக வலம் வருகிறது.
இந்த பூனையை வாரிசிரி மாதச்சிட்டிபன் என்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் செல்லப்பிராணி விற்பனை மையத்தில் இருந்து வாங்கியுள்ளார். 2012ல் நளாவின் ஒரு செயலை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பணக்கார பூனை
அது பலரையும் ஈர்த்த நிலையில், நளாவின் ஒவ்வொரு செயலையும் படம்பிடித்து பகிர்ந்துள்ளார். பாலோயர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகம். இதன் மூலம் பூனைக்குட்டி நளா 84 மில்லியன் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.895 கோடியை சம்பாதித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரும் பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் நளா படைத்துள்ளது. ஆண்டின் டிக்டோக்கர் பட்டத்தையும் வென்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள உரிமையாளர், நளாவை வளர்க்கத் தொடங்கியதில் இருந்து,
அதை வீடியோ எடுத்து சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பதே தனது முழு நேர வேலையாக மாறிவிட்டது.
ஒரு கணிசமான தொகையை விலங்குகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.