பூனை குறுக்கே சென்றால் கெட்ட சகுணமா? ஜோதிடமும், அறிவியலும் - என்ன சொல்கிறது?
பூனை குறுக்கே செல்வது குறித்து அறிவியல் கூறும் காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
கெட்ட சகுனம்
நாம் வெளியே செல்லும் போது பூனையை பார்த்தால் உடனடியாக சிறிது நேரம் நின்றுவிட்டு செல்லுவோம். இதனை நம்மில் பலர் கெட்ட சகுணமாக கருதுகிறோம். ஏனெனில் சில சமயங்களில் பூனைகள் அசுபமாக கருதப்படுகின்றன.
பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால் மோசமான அறிகுறி என்றும் வலமிருந்து இடமாக நகர்ந்தால் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. மேலும், பூனைகள் எதிர்மறை ஆற்றலை கொண்டுவருவதால் வீட்டில் பூனை நல்லதல்ல என்று பழைய நம்பிக்கைகளின்படி கூறப்படுகிறது.
என்ன காரணம்?
குறிப்பாக கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மில் பலரிடமும் உள்ளது. ஏனெனில், சனி பகவானுக்கு கருப்பு உகந்தது என்பதால் தீமை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இந்த விஷயங்களில் அறிவியல் கூறும் காரணம் என்ன? முற்காலத்தில் மக்கள் மாட்டு வண்டிகளில் சென்றனர். அப்போது பூனை குறுக்கே சென்றால் மாடு பயந்துவிடும் என்பதால் வண்டியை நிறுத்திவிட்டு சிறுது நேரம் கழித்து செல்வார்கள். இது நாளடைவில் மூடநம்பிக்கையாக மாறி, தற்போது கெட்ட சகுணமாக பார்க்கப்படுகிறது.