கொலஸ்ட்ரால் அளவு குறையணுமா..? இந்த தோசை தான் பெஸ்ட்!
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பச்சை பயிறு தோசை பெரிதும் உதவுகிறது.
பச்சை பயிறு தோசை
உலகம் முழுவதும் பலரும் தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். அதிக கொலஸ்ட்ரால் அளவு பல்வேறு இருதய நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
இதற்கு சில உணவுகளும் நமக்கு உதவுகின்றன. அந்தவகையில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பச்சை பயிறு தோசை பெரிதும் உதவுகிறது. இந்த தோசை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு - 1 கப்
பச்சரிசி - 3 ஸ்பூன்
குடை மிளகாய் -1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சை பயிறு மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் ஊறவைத்த பச்சை பயிறு பச்சரிசி மற்றும் அதனுடன் நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வழக்கமான தோசை போல் எண்ணெய் ஊற்றி எடுக்கவும். இந்த தோசையை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.