அடிவயிறு தொப்பையை குறைக்கணுமா? இந்த 3 பொருள் மட்டும் போதும் - நோட் பண்ணுங்க..
உடல் எடையை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைப்பதற்கும், ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துவதற்கும் விதைகளைபோல நன்மை தரக்கூடியது வேறு இருக்க முடியாது.
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு சத்து, கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. எனவே கோடை காலத்தில் உடல் சூட்டை குறைப்பதற்கும் உதவுகிறது.
குறிப்பாக, உடல்எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சியா விதைகளை போட்டு, இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரியுமாம். இதில் எலுமிச்சம் சாறு கலந்து குடிக்கும்போது, கூடுதல் பலன் கிடைக்கும்.
3 டிப்ஸ்
இதனை போலவே, உடல் எடையை குறைக்க உதவுவது சப்ஜா விதைகள். குளிர்ச்சி தன்மை வாய்ந்த சப்ஜா விதைகளில், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 1 ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து உள்ளதால், எடை இழப்புக்கு சிறந்த உணவாக உள்ளது.
இதனை பாலில் கலந்து குடித்தால் உடலிலுள்ள பித்தம், மலச்சிக்கல் நீங்கும். மூன்றாவதாக, கொத்தமல்லி விதை மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்துக்கள் கொண்டவை. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்பு இதை குடித்தால், பசி உணர்வு குறைந்து, செரிமானமும் எளிதாகும்.