எலித்தொல்லை அதிகம்: இங்கிலாந்து பிரதமரின் வீட்டில் 10 ஆண்டுகளாக வசிக்கும் பூனை

world kingdom pat
By Jon Feb 16, 2021 03:07 PM GMT
Report

எலித்தொல்லையை குறைப்பதற்காக இங்கிலாந்து பிரதமரின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறது. இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது.இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது.

இதற்காக பூனை ஒன்றை வளர்க்க விரும்பிய கேமரூன், மாநகராட்சி ஊழியரிடம் இருந்து வாங்கினார். இதனால் எலித் தொல்லையும் குறைந்தது, பூனையும் சொகுசாக சுற்றித் திரிந்தது. கேமரூனுக்கு பிறகு தெரசாமேயும், தற்போது போரீஸ் ஜான்சனும் பிரதமராக உள்ளார். ஆனால் பிரதமரின் வீட்டில் இருந்த பூனை மட்டும் மாறவேயில்லை

. பூனை வந்து நேற்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாம்.