செய்வினை செஞ்சுதான் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது - ஜெய் ஷா மீது குற்றச்சாட்டு
செய்வினை வைத்ததாக ஹரீம் ஷா என்ற நபர் ஜெய் ஷா மீது பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
வென்ற இந்தியா
2023 உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஹரீம் ஷா என்ற பெண், தனக்கு நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த செய்தியின் அடிப்படையில் ஜெய் ஷா புகழ்பெற்ற மாந்திரீகர் கார்த்திக் சக்ரபர்த்தியை பணி அமர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்வினை வைத்து விட்டதாகவும்,
குற்றச்சாட்டு
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போது பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா இருக்கிறார்.
அவர்தான் உலகக்கோப்பை தொடர் நடத்துவது குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். இவர் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.