அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் என்ன தவறு? – முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் என்ன தவறு என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் வேலுமணி
நேற்று முன்தினம் பேரவையில், ஐபிஎல் போட்டியை காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக கட்சி உறுப்பினர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை விடுத்து இருந்தார்.
அமைச்சர் உதயநிதி பதில்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, ஐபிஎல் தொடரை நடத்துவது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தான், நான் அல்ல என அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதை நீக்க நயினார் மகேந்திரன் பேரவையில் கோரிக்கை வைத்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார்.
அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை. தவறு இருந்திருந்தால் நானே நீக்க சொல்லி இருப்பேன். ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அமித்ஷா பற்றிய உதயநிதி பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.