அடங்க மறுத்த தோனியை அடங்க வைத்த பிசிசிஐ - சீக்ரெட் மீட்டிங்கில் நடந்தது என்ன?
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
மேலும், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக மகேந்திர சிங் தோனி செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது,
இந்திய அணிக்கு மீண்டும் சேவை செய்ய தோனி ஒப்புக் கொண்டதை நான் பெருமையாக நினைக்கிறேன். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் மற்ற ஊழியர்களுக்கு தோனி நன்கு பழக்கமானவர். தோனியை ஆலோசகராக நியமிக்க முடிவு எடுத்ததும், துபாயில் இருந்த அவரிடம் பேசினேன்.
டி20 உலகக்கோப்பைக்கு மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்க அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக சக ஊழியர்களிடம் ஆலோசனை செய்தேன்.
அவர்களும் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் துணை கேப்டனிடம் பேசி இறுதி செய்தோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக இருக்க தோனி ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.