பிரியாணியெல்லாம் விடுங்க; இதுதாங்க டேஸ்ட் - அந்த உணவுக்காக படையெடுத்த பாக். வீரர்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்த உணவை நாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் வீரர்கள்
2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 14ஆம் தேதி அகமதா பாத் நகரில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோத உள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அணி ஹைதரபாத்தில் தான் தங்களின் இரண்டு பயிற்சிப் போட்டிகள் மற்றும் முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றது. ஹைதராபாத்தில் இருந்து கிளம்பும் முன் கடைசியாக பெஷாவர் ரெஸ்டாரன்ட் சென்றுள்ளனர்.
உணவில் ஆர்வம்
குறிப்பாக சார்ஸி திக்கா என்ற உணவைத் தான் பாகிஸ்தான் வீரர்கள் முதலில் மிகவும் விரும்பி சப்பிட்டுள்ளனர். மேலும், சாப்ளி கபாப் என்ற அசைவ உணவு. பிரியாணியை விட கபாப் நன்றாக இருந்ததால் அதையும் விரும்பி உண்டுள்ளனர்.
தைத் தவிர சார்ஸி திக்கா, சிக்கன் கடாய், மட்டன் கடாய், மட்டன் பிரியாணியை ருசித்துள்ளனர். இந்த தகவலை உணவகத்தின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். முதலில் பாகிஸ்தான் வீரர்களிடம் பணம் வாங்க மறுத்து விட்டாராம்.
ஆனால், பணம் வாங்கினால் தான் பார்சலை வாங்கிக் கொள்வோம் எனக் கூறி கட்டாயப்படுத்தி பாகிஸ்தான் வீரர்கள் பணம் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.