BCCI செயலாளர் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பதிலடி!

Cricket Indian Cricket Team Board of Control for Cricket in India Pakistan national cricket team
By Nandhini Oct 19, 2022 05:38 AM GMT
Report

ஆசிய கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று தெரிவித்த BCCI செயலாளர் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

T20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஜெய்ஷா தெரிவித்தார்.

ramiz-raja-jaisha-bcci-india

ரமீஸ் ராஜா கண்டனம்

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை புறக்கணிக்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என் ஜெய்ஷா அறிவித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.