உலகின் மிக விலையுயர்ந்த அரிசி - விலையை கேட்டால் தலை சுற்றும்! எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக விலையுயர்ந்த அரிசியாக ஜப்பான் நாட்டின் கின்மேமை அரிசி சிறந்து விளங்குகிறது.
விலையுயர்ந்த அரிசி
உலக அளவில் பல அரிசி வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பாஸ்மதி அரிசி தான் மிகவும் பிரபலம்.அதேபோல், உலக அளவில் அரிசிகளின் தரத்திற்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அப்படி ஜப்பான் நாட்டில் உள்ள ஒருவகை அரிசி தான்.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது.இந்த அரிசி வெறும் அதிகவிலைக்கு மட்டுமின்றி, பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள டோயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையைத் தயாரித்து வருகிறது.இந்த அரசி வெள்ளை மற்றும் பழுப்பு வகைகளில் வருகிறது.இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது.மேலும் வழக்கமான அரிசியைப் போலல்லாமல், சமைப்பதற்கு முன் கழுவ வேண்டிய அவசியமில்லை.
ஒரு கிலோ
தற்பொழுது கின்மேமை அரிசி தான்,உலகிலேயே விலை உயர்ந்த அரிசி என்ற சாதனையைப் படைத்துள்ளது . ஒரு கிலோ $155 விலைக்கு விற்கப்படுகிறது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000. விலைக்கு விற்கப்படுகிறது .ஒவ்வொன்றும் 140 கிராம் கொண்ட ஆறு பாக்கெட்டுகளைக் கொண்ட பெட்டிகளில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.