ஜூஸில் சிறுநீர் கலந்து விற்பனை.. போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உத்தரப் பிரதேசத்தில் ஜூஸில் சிறுநீர் கலந்து விற்றதாகக் கூறி ஜூஸ் கடைக்காரரை பொது மக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காசியாபாத்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜூஸ் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடைக்கு ஜூஸ் குடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருவது வழக்கம் .
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர்.
அங்குக் கடையில் உள்ளிருந்த கடைக்காரர் ஜூஸில் சிறுநீர் கலந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் கடைக்குள் சென்று கடைக்காரர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ஜூஸில் சிறுநீர்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காசியாபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் அமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ஜூஸ் கடையில் சோதனை நடத்தி சிறுநீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனை மீட்டனர்.மேலும் இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.