ஒவ்வொரு ஆணுக்கும் 2 மனைவிகள்.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம்.!!
இந்தியாவில் திருமணப் பந்தம் என்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இந்தியா
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் இரு மனைவிகள் உள்ளனர்.அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .
அந்த வினோத கிராமத்தின் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் மொழி , மதம் ,கலாச்சாரம்,உணவு வகைகள் , பழக்க வழக்கம் ,இறை வழிபாடு மற்றும் திருமண முறை என மாநிலங்களுக்கு ஏற்றவாறும் இடத்திற்கு ஏற்றவாறும் மாறுபடுகின்றன.
இந்தியாவில் திருமணப் பந்தம் என்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் நிலையில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் இரு மனைவிகள் உள்ளனர்.
பொதுவாகத் திருமணம் ஆன தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்தோ ,கணவன் அல்லது மனைவி இறந்த பின் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ கி பஸ்தி கிராமத்தில் பெரியவர்கள் அனைவரும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர்களாக உள்ளனர் . இதற்குக் காரணம் இரட்டை முறை திருமணம் தான்.
வினோத கிராமம்
ஆம் ,முதல் திருமணத்தில் மனைவி கர்ப்பமாகவில்லை அல்லது ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ளது என்றால், அவர்கள் ஆண் வாரிசுக்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவுடன், ஆண் வாரிசு பிறக்கிறது.
இந்த நம்பிக்கையின் காரணமாக, இங்குள்ள ஆண்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அதன்படி இங்கு இரட்டை திருமணம் செய்வதால் பெண்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதில்லை என்றும், அவர்கள் மிகுந்த அன்புடன் சகோதரிகளைப் போல வாழ்கிறார்கள் என்றும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.