இனி ரயிலில் விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்யலாம் - IRCTC உடன் கைகோர்த்த சோமட்டோ

Indian Railways Railways Zomato
By Karthikraja Sep 17, 2024 11:30 AM GMT
Report

ரயில் பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவையை சோமட்டோ விரிவாக்கம் செய்துள்ளது.

ரயில் உணவு

ரயில் பயணம் செய்பவர்கள் பொதுவாக வீட்டிலிருந்தே சாப்பாட்டை எடுத்து செல்வார்கள். ஆனால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் உணவு கெட்டு விடும் என்பதால் ரயில்வே கேட்டரிங்கில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். 

irctc food

ஆனால் ரயில்வே கேட்டரிங்கில் சில குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும். விரும்பிய உணவை சாப்பிட முடியாதது பயணிகளின் நீண்ட கால குறையாக இருந்தது. 

குலாப்ஜாமூனுடன் கரப்பான் பூச்சி வழங்கிய IRCTC - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பயணி

குலாப்ஜாமூனுடன் கரப்பான் பூச்சி வழங்கிய IRCTC - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பயணி

சோமட்டோ

தற்போது அதை போக்கும் வகையில் ஐஆர்சிடிசி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமட்டோ(Zomato) உடன் ஐஆர்சிடிசி கைகோர்த்துள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவை ரயிலில் பயணித்தபடியே ஆர்டர் செய்து கொள்ள முடியும். 

zomato delivery in railway station

'Zomato - Food Delivery in Trains என்ற ஆப்ஷன் வழியாக ரயில் பயணிகள் உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும். சோமாட்டோ செயலியில் ரயில் என செர்ச் செய்து இருப்பிடத்தை தேர்வு செய்த பின், பயணிகளின் பி.என்.ஆர்(PNR) எண் கேட்கும். அதில் அந்த எண்ணை கொடுத்தால் தானாகவே பயணி செல்லும் ரயில் மற்றும் இருக்கை குறித்த விவரங்களை பெற்று விடும்.

ஸ்டேஷனில் டெலிவரி

பயணிகள் ஆர்டர் செய்த பிறகு குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஸ்டேஷனில் உள்ள சோமாட்டோ டெலிவரி ஊழியரிடம் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை ரயில் தாமதம் ஆனாலும் கூட சோமாட்டோ ரயில் நேரத்தை டிராக் செய்து டெலிவரியை சரியான நேரத்தில் வழங்கிவிடும்.

கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் டெல்லி, பிரக்யாராஜ், கான்பூர், லக்னோ, வாரணாசி என 5 ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இந்த சேவையை துவங்கிய சோமட்டோ தற்போது 100 நகரங்களுக்கு இந்த சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.