குலாப்ஜாமூனுடன் கரப்பான் பூச்சி வழங்கிய IRCTC - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட பயணி
ரயில் பயணத்தின்போது வழங்கப்பட்ட உணவில், கரப்பான் பூச்சி ஊர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐஆர்சிடிசி
ரயில் பயணத்தின்போது பயணிகள் பசியாறுவதற்காக, ரயிலிலே ஒப்பந்த அடிப்படையில் உணவகத்தை நடத்தி வருகிறது ஐஆர்சிடிசி. இதில் தேவையான உணவை ஆர்டர் செய்து, தங்கள் இருக்கையில் இருந்தபடியே பயணிகள் பசியாறலாம்.
ஐஆர்சிடிசி உணவு குறித்து பல தரப்பட்ட கருத்துகள் வந்த நிலையில், தற்பொழுது குலாப்ஜாமூனில் உயிருடன் கரப்பான் பூச்சி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கரப்பான் பூச்சி
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து மும்பையின் லோக்மான்யா திலக் முனையத்துக்கு பயணித்த ஒருவர், ”முதல் முறையாக ஐஆர்சிடிசியில் இரவு உணவு ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு கிடைத்ததோ உயிருள்ள கரப்பான் பூச்சி” என பதிவிட்டிருந்தார்.
Cockroach in food
byu/Aggravating-Wrap-266 inindianrailways
மேலும் அந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இரவு உணவுடன் இடம்பெற்றிருந்த குலாப்ஜாமூனில் ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருக்கிறது.
இதை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் ஐஆர்சிடிசி உடனான தங்களது கசப்பான அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர்.