இனி இரவில் ரயிலில் செல்வோருக்கு புதிய ரூல்ஸ் - IRCTC அதிரடி!
ஐஆர்சிடிசி ரயில் பயணிகளுக்கு இரவில் விதிகளை வகுத்துள்ளது.
இரவு பயணம்
ரயில் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு, பயண டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டை ஆய்வு செய்ய முடியாது. ஸ்டேஷனில் பயணிகள் ஏறும் போது மட்டும் அவர்களது சீட்டுகளை சரிபார்க்கலாம்.
மேலும், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் இதர ரயில்வே பணியாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும். பயணிகள் இயர்போன் இல்லாமல் சத்தமாக இசையைக் கேட்க கூடாது. குழுவாகப் பயணம் செய்பவர்கள் இரவு 10 மணிக்குப் பிறகு சத்தமாக பேசக்கூடாது. இரவு மெல்லிய வெளிச்ச நைட் லைட்டுகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளும் இரவு 10 மணிக்கு மேல் அணைக்கப்படும்.
புதிய ரூல்ஸ்
அதற்குப்பின், ரயில்வே சார்பில் உணவு வழங்கக்கூடாது. இருப்பினும், இரயிலில் இரவு நேரத்திலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.
மேலும், நடுத்தர பெர்த் பயணிகள் சிறிது நேரம் கழித்து தங்கள் பெர்த்துகளை விரித்தால் கீழ் பெர்த் பயணிகள் புகார் செய்ய முடியாது. இந்த விதிகளை மீறினால் பயணிகள் ஊழியர்களிடமோ, இணையத்திலோ புகாரளிக்கலாம்.