உணவுக்கே போராடிய நாடு; இப்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப்!
ஏழ்மையான இருந்த நாடொன்று தற்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.
சிங்கப்பூர்
1947ம் ஆண்டு அறிக்கையின்படி, சிங்கப்பூர் அந்த நேரத்தில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடாக இருந்துள்ளது. அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் மோசமாக இருந்துள்ளது.
1965ல் சிங்கப்பூர் முழு சுதந்திரம் பெற்றது. ஆனால், எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்களைக் கொண்டிருக்கவில்லை.
வளர்ந்த நாடு
அதன்பின் முதல் பிரதமரான லீ குவான் யூ, நாட்டை வழிநடத்தி பாராட்டத்தக்க வகையில் கொள்கைகளை வகுத்துள்ளார். அனைத்து பகுதிகளில் இருந்தும் வணிகங்கள் ஈர்க்கப்பட்டுள்ளது.
கல்வியில் அதிக முதலீடு செய்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றன. தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்தியது.
உள்கட்டமைப்பு மிகவும் வலுவானது. அதன்படி, தற்போது சிங்கப்பூர் மிகவும் வளர்ந்த நாடாக உள்ளது.