ரூ.9 கோடி மதிப்புள்ள அதிர்ஷ்ட கல் - வீட்டு வாசப்படியாக யூஸ் செய்த மூதாட்டி!

Romania
By Sumathi Sep 08, 2024 06:53 AM GMT
Report

அதிர்ஷ்ட கல்லை மூதாட்டி ஒருவர் வீட்டு வாசப்படியாக பயன்படுத்து வந்துள்ளார்.

அம்பர் கல் 

தென்கிழக்கு ரோமானியா, கோல்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது வீடு தரை தளத்தில் இருந்து சற்று உயரமாக இருந்துள்ளது.

amber stone

இந்நிலையில், தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஓடைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு கல்லை கண்டுள்ளார். அதனைத் தூக்கிவந்து தனது வீட்டின் வாசப்படியில் போட்டு தினமும் வீட்டிற்குள் சென்று வர அதனை உபயோகம் செய்துள்ளார்.

அந்த மூதாட்டி அதன்பின் 90களின் முற்பகுதியில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீட்டிற்கு அவரின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் - லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பறிபோன உயிர்

பாம்புக்கு முத்தம் கொடுத்து ரீல்ஸ் - லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பறிபோன உயிர்


ரூ.9 கோடி மதிப்பு

அப்போது, இது சாதாரண கல் போல் இல்லையே என கவனித்து தில் இருந்து சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார். அப்போது, அது 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய அம்பர் கல் என்பது தெரியவந்துள்ளது.

ரூ.9 கோடி மதிப்புள்ள அதிர்ஷ்ட கல் - வீட்டு வாசப்படியாக யூஸ் செய்த மூதாட்டி! | 9 Crore Amber Found In Romania Viral

பிறகு இதுகுறித்து ரோமானிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்கள் அந்த கல்லை எடுத்து சென்றுள்ளனர். அந்தக் கல்லின் எடை 3.5 கிலோ. இதன் மதிப்பு 1.1 மில்லியன்( இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய்).

தற்போது அந்தக் கல் கர்கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.