கல்லாக மாறிய கரு - 35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த 73 வயது மூதாட்டி
73 வயது மூதாட்டி கருவில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இருக்கிறார்கள். அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் கடுமையான வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, மருத்துவர்கள் அந்த மூதாட்டியின் வயிற்றை பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்தது.
மேலும் அவரின் வயிற்றில் குழந்தை உருவாகி அந்த குழந்தை கல்லாக மாறியது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார்.
சுமார் 2 கிலோ எடை கொண்ட இந்த கல் குழந்தை 7-வது மாதம் வரை வளர்ச்சியடைந்து கல்லாக மாறி இருக்கிறது. மருத்துவ உலகில் இவ்வறான கருவை லித்தோபிடியன் lithopedion என்று கூறுகின்றனர்.
கருமுட்டையில் கரு உருவாகாமல் அடி வயிற்றில் கரு உருவானால் அதை லித்தோபிடியன் lithopedion என்று அழைக்கிறார்கள். இவ்வாறாக சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், அவ்வறாக உருவாகும் கரு ஒரிரு நாளில் தானாக வெளிவந்து விடும். அடி வயற்றில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அது உடனடியாக சிக்கலை ஏற்படுத்திவிடும். இதுவரை உலகில் அதிகாரப்பூர்வமாக 290 பேருக்கு இப்படியாக லித்தோபிடியன்lithopedion முறையில் கரு அவர்கள் வயிற்றில் வளர்த்திருக்கிறது.
முதன்முதலாக 1582ம் ஆண்டில் இதுபோல ஒரு பெண்ணின் வயிற்றில் கல் குழந்தை வளர்ந்துள்ளது. அந்த பெண் 82 வயதில் உயிரிழந்திருக்கிறார். குறிப்பிட்ட இந்த மூதாட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வயிற்றுக்குள் சென்ற கரு அடி வயற்றிகுள் சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் அங்கேயே வளர்ச்சியடைந்திருக்கிறது.
பின்னர். சுமார் 7 மாதம் வளர்ந்த கரு பின்னர் வளர்ச்சியடையாமல் இருந்திருக்கிறது. கரு முட்டைக்குள் குழந்தை இல்லாததால் அவருக்கு அந்த காலத்தில் மாதவிடாயும் சரியாக இருந்திருக்கிறது. ஆனால் உடல் எடை மட்டும் கூடி இருக்கிறது.
வயது முதிர்வின் காரணமாக கூடியிருக்கும் என அவர் கருதிய நிலையில் தற்போது தான் அது குழந்தை என தெரிய வந்திருக்கிறது. வயிற்றுக்குள் இருந்த குழந்தை 7 மாதத்திற்கு பிறகு வளர்ச்சியடையாததால் அவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன் இந்த குழந்தையை வெளியே தள்ள முயற்சித்திருக்கும்.
அது முடியாத பட்சத்தில் இந்த குழந்தையை கல்லா மாற்றி இருக்கிறது. அதிர்ஷ்ட வசமாக இது இவ்வளவு ஆண்டுகள் பாதிப்பை எதுவும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், தற்போது வலியை ஏற்படுத்திய நிலையில் 35ஆண்டுகளுக்கு பிறகு இதை மருத்துவர்கள் கண்பிடிக்கப்பட்டு அகற்றியுள்ளனர்.