இந்த நாட்டில் 11 மணி நேரம்தான்; கடிகாரத்திலேயே 12 மணி கிடையாது - ஏன் தெரியுமா?
11 மணி வரை மட்டுமே உள்ள கடிகாரத்தை பயன்படுத்தும் நாடு குறித்து பார்ப்போம்.
சோலோதர்ன்
சுவிட்சர்லாந்தின் வடமேற்கு நகரமான சோலோதர்ன் நகரில் 11 மணி நேரம் கொண்ட கடிகாரத்தைதான் பயன்படுத்துகின்றனர். இங்கு 12 மணி ஆகாது. இந்த நகரத்தில் எண் 11 பலவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது.
11 அருங்காட்சியகங்கள், 11 தேவாலயங்கள், 11 நீரூற்றுகள் என பல உள்ளன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்கள் இந்த நகரத்தை நிறுவியுள்ளனர்.
11 மணி நேரம் மட்டுமே..
தொடர்ந்து, 1215ல் சோலோதர்னில் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 11 பிரதிநிதிகள் இருந்துள்ளனர். 1481ல் 11 வது மாகாணமாக சுவிஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்போது 11 நகர காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து 15ம் நூற்றாண்டில் இங்கு புனித அர்சஸ் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. அதில் 11 கதவுகள், 11 ஜன்னல்கள், 11 வரிசைகள் மற்றும் 11 மணிகள் உள்ளன.
அதன் கட்டுமானத்தில் 11 வகையான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், கடிகாரத்தில் 12 வது மணி இல்லாததற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.