கடற்கரைகளில் மிதக்கும் தங்கம் - விக்குற விலையில் இது எங்கே தெரியுமா?
கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தங்கத் துகள்கள்
நியூசிலாந்தின் தெற்கு தீவைச் சுற்றியுள்ள இடங்களில் மணலில் தங்கத் துகள்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி நியூசிலாந்து புவியியல் மற்றும் புவி இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தெற்குத் தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் அனைவரும் புறக்கணிக்கும் நுட்பமான பொருளைப் பார்ப்பதே இந்த ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.
இதில் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியரான டேவ் க்ரோ, இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து, மணல் துகள்களுக்குள் மறைந்திருக்கும் தங்கத் துகள்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்களைப் பிடிக்க ஒரு மின்னணு நுண்ணோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பார்க்கமுடியாது
சவுத்லேண்டில் உள்ள ஒரு இடத்தில்,10 மைக்ரோமீட்டர் அகலம் கொண்ட துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது மனித முடியின் அகலத்தில் ஐந்தில் ஒரு பங்கு என கூறப்படுகிறது. 1800களில் நியூசிலாந்தின் தங்க வேட்டை ஆண்டுகளில் இந்த தங்கம் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை.
நீரின் மேற்பரப்பில் நல்ல தங்கம் மிதக்கிறது. அதில் பெரும்பகுதி இழக்கப்படுகிறது. மக்கள் எந்த துகள்களையும் பார்ப்பது சாத்தியமில்லை. இங்கு சில சுரங்கங்கள் நடந்துள்ளன. ஆனால் சுரங்கத் தொழிலாளர்கள் நல்ல தங்கத்தை சேமிப்பது மிகவும் கடினம் என க்ரோ தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் கடற்கரையில் தங்கத்தின் புகைப்படங்களை வழங்கிய முதல் ஆராய்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.