தங்கம் விலை 38% குறைய வாய்ப்பிலை; இவ்வளவுதான் குறையும் - ஆனந்த் சீனிவாசன்
தங்கம் விலை குறைவு குறித்து ஆனந்த் சீனிவாசன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை
தங்கம் விலை 38% வரை குறையலாம் என வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டது பெருமளவில் கவனம் பெற்று பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் அதுகுறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். "மார்னிங் ஸ்டார் செய்தி நிறுவனத்தின் அனாலிசிஸ்ட் ஸ்டூவர்ட் என்பவர் தங்கம் விலை 38% வரை சரியும் எனக் கணித்துள்ளார். 1980ம் ஆண்டு அதுபோல நடந்து இருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
800 டாலராக இருந்த இருந்த தங்கம் விலை 200 டாலராக சரிந்தது. இப்போதும் பணவீக்கம் முழுமையாகக் குறைவதற்கு முன்பே அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாலேயே தங்கம் விலை அதிகரிக்கிறது. ஏற்கனவே சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் கைவசம் இருக்கும் டாலரை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
டிரம்ப் செய்யும் கூத்தை எல்லாம் பார்த்த பிறகு சீனா தங்கம் வாங்குவதை அதிகரிக்கவே செய்யும் என நினைக்கிறேன். அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை வர வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டால், வரலாம்.
ஆனால் அப்போது நமக்கு முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துவிடும். ரூபாய் மதிப்பில் சரிந்தாலும் 10 முதல் 12% மட்டுமே தங்கம் விலை சரியும். ஆனால், அப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் துல்லியமாகக் கணிக்கவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.