Wonderla-வில் நாட்டின் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர் - அதுவும் சென்னையில்.. வைரல் வீடியோ!
நாட்டின் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர் வீடியோ வைரலாகி வருகிறது.
Wonderla
வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்டின் நிர்வாக இயக்குநர் அருண் சிட்டிலப்பிள்ளி. இவர் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க், உருவாகிறது. தொடர்ந்து, 2025 ஜூன் மாதன் திறக்கப்படவுள்ளது.
ரோலர்கோஸ்டர் வீடியோ
மேலும், அந்த வீடியோவில் ரோலர் கோஸ்டர் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் அமைக்கப்படும் ரோலர் கோஸ்டர் இந்தியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும்.
New roller coaster getting ready to be assembled in Chennai! @Wonder_La Chennai worksite pic.twitter.com/sKkd94orwl
— Arun Chittilappilly (@arunpally) August 6, 2024
இதன்மூலம், பொழுதுபோக்குத் துறை புதிய உயரத்தை எட்டும். இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் வொண்டர்லா வெற்றிக்கரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.