205 அடி உயரம்; அப்படியே நின்ற ரோலர் கோஸ்டர் - அப்புறம் என்னாச்சு, பயணிகள் நிலை?

United States of America
By Sumathi Aug 07, 2023 07:40 AM GMT
Report

205 அடி உயரத்தில் திடீரென ரோலர் கோஸ்டர் நின்ற சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

ரோலர் கோஸ்டர்

மேக்னம் XL-200 என்ற இந்த ரோலர் கோஸ்டர் 1989ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 200 அடி உயரத்தைத் தாண்டி உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.

205 அடி உயரம்; அப்படியே நின்ற ரோலர் கோஸ்டர் - அப்புறம் என்னாச்சு, பயணிகள் நிலை? | Roller Coaster Freezes At 205 Foot Drop America

இந்நிலையில், அமெரிக்கா ஓஹியோவின் சாண்டஸ்கியில் சிடார் பாயிண்ட் கேளிக்கை பூங்கா அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் ரோலர் கோஸ்டர் 205 அடி உயரத்தில் சென்ற போது தொழில்நுட்ப கோளாறால் அப்படியே மேலே நின்றுவிட்டது.

அலறிய பயணிகள்

இதனால் அதில் இருந்தோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபோல பாதியில் நின்றால் அதிகபட்சம் சில நிமிடங்களில் தானாக இயங்கும். ஆனால், ரொம்ப நேரமாக அப்படியே இருந்தது. எனவே அதனை உடனடியாக மீண்டும் இயங்க வைக்க முடியவில்லை.

205 அடி உயரம்; அப்படியே நின்ற ரோலர் கோஸ்டர் - அப்புறம் என்னாச்சு, பயணிகள் நிலை? | Roller Coaster Freezes At 205 Foot Drop America

அதனையடுத்து அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டனர். இதில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை சிறிய பிரச்சனை காரணமாகவே ரோலர் கோஸ்டர் இப்படி நடு வழியில் நின்றதாகப் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.