கண்காட்சியில் பிரமாண்ட ராட்டினம் சரிந்து விழுந்து விபத்து - அலறி துடித்த சிறுவர்கள்
பஞ்சாப்பில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர்.
சரிந்து விழுந்த ராட்டினம்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பொழுது போக்கு விளையாட்டு சாதனங்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் ராட்சத ராட்டினம் ஒன்றில் மக்கள் ஆர்வமுடன் ஏறினர். அப்போது ராட்டினம் கிளம்பிய வேகத்தில் 50 அடி உயரத்தில் மேலே சென்றதும் திடிரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராட்டினத்தில் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் காயமடைந்தனர்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறினர். பின்னர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்காட்சியில் எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Live Visual of swing breaking in #Mohali phase 8, Many people got injured. Around 16 women & kids were hospitalised after the incident.#Punjab
— Siraj Noorani (@sirajnoorani) September 4, 2022
Via-@NikhilCh_ pic.twitter.com/cKlAJBuI3x