இனி தாலி வாங்குவதில் பெண்களுக்கு சிக்கல் இல்லை - மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
தங்கம் மீதான வரி குறைப்பிற்குப் பிறகு தாலி வாங்குவதில் பெண்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்
மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தங்கம் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்ட பிறகு, தற்போது பெண்கள் அதிக எடையுள்ள தாலிகளை சிரமமின்றி வாங்க எந்தப் பிரச்சனையும் இருக்காது என தெரிவித்தார்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார் இந்த முடிவு தங்கத் தொழிலில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது .
தங்கத் தொழிலில் உள்ள ஒவ்வொரு விவாதத்திலும் வரிக் குறைப்பு ஆதிக்கம் செலுத்துவதாகவும், மேலும் கடமைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சிக்கல் இல்லை
தொடர்ந்து பேசிய அவர் வெளிநாடுகளில் உள்ள நகைக்கடைகளிலிருந்து இந்தியச் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்குத் தங்கம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் உதவ வேண்டும்.இது நாட்டிற்கும் துறைக்கும் உதவும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவும் வகையில் பெண்களுக்கு ,பொருளாதாரம் , கல்வி போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒரு துறை அளவிலான திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்த நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார்.