மாநிலங்களவைத் தேர்தல் 2022 - கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Smt Nirmala Sitharaman
By Nandhini
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
இத்தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையோடு முடிவடைகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.