பெண்களுக்கு பாதுகாப்பு என்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை -கனிமொழி எம்.பி.!

Smt M. K. Kanimozhi Tamil nadu DMK
By Vidhya Senthil Sep 05, 2024 02:22 AM GMT
Report

பெண்கள் பணி செய்யும் இடத்திலும், வாழும் இடத்திலும் பாதுகாப்பு என்பது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையாகும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

 ஹேமா அறிக்கை

மலையாளத் திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

kanimozhi

இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து மலையாள நடிகைகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தமிழ் திரையுலகில் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

கனிமொழி அதை செய்தால்...நான் கட்சியை விட்டு விலகுகிறேன் - அண்ணாமலை சவால்!

கனிமொழி அதை செய்தால்...நான் கட்சியை விட்டு விலகுகிறேன் - அண்ணாமலை சவால்!

கனிமொழி

அப்போது பேசிய அவர்,'பெண்கள் எந்த இடத்தில் பணி செய்தாலும், அவர்கள் அனைத்து விதமான அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கோருவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறினார் .

பெண்களுக்கு பாதுகாப்பு என்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை -கனிமொழி எம்.பி.! | Women Protection Workplace Kanimozhi Mp

மேலும் பெண்கள் பணி செய்யும் இடத்திலும், வாழும் இடத்திலும் பாதுகாப்பு என்பது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையாகும். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட யாருக்கும் என்ற உரிமையும் இல்லை என்று கூறினார்.