நீட் தேர்வு முறைகேடு; பிரச்சனையை சரி செய்ய ஒரே தீர்வு இது தான்...கனிமொழி எம்.பி!

Smt M. K. Kanimozhi Tamil nadu NEET
By Swetha Jun 13, 2024 02:51 AM GMT
Report

நீட் தேர்வு முறைகேடு குறித்து கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்.பி 

இந்த கல்வி ஆண்டின் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.இம்முறை தேர்வு எழுதியவர்களில் சுமார் 1,500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு; பிரச்சனையை சரி செய்ய ஒரே தீர்வு இது தான்...கனிமொழி எம்.பி! | Kanimoli About Neet Exam Malpractice

அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்றது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஒரே கல்வி மையத்தில் இருந்து அதிகம் பேர் முழு மதிப்பெண்களை பெற்றது பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது - மா.சுப்பிரமணியன்!

நீட் தேர்வு முறைகேடு: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது - மா.சுப்பிரமணியன்!

தீர்வு இது தான்..

இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு; பிரச்சனையை சரி செய்ய ஒரே தீர்வு இது தான்...கனிமொழி எம்.பி! | Kanimoli About Neet Exam Malpractice

இந்த நிலையில், நீட் தேர்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நீட் தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை.

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாக சரிசெய்வதை விட நீட் தேர்வை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். என தெரிவித்துள்ளார்.