கனிமொழி அதை செய்தால்...நான் கட்சியை விட்டு விலகுகிறேன் - அண்ணாமலை சவால்!
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அண்ணாமலை
தேர்தலில் தோவியை தழுவிய பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மூன்றுமுனைப் போட்டி நடத்தியிருக்கிறோம். பெரிய கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் குறைத்திருக்கிறோம். இவையெல்லாம் எங்களுக்கு கிடைத்த வெற்றி.
நான் இன்றைக்கும் ஓவர் கான்ஃபிடன்ஸ் தான். 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம். அதுதான் எங்களின் இலக்கு. தமிழ்நாட்டில் மூன்றுமுனைப் போட்டி இரண்டுமுனைப் போட்டியாக மாறவேண்டும். அப்போதுதான், தென்மாவட்டங்களில் பா.ஜ.க வெற்றி சாத்தியமாகும். இன்று அது நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களே 7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ஐந்துமுறை ஆட்சியிலிருந்த கட்சியினர் டெபாசிட் இழந்திருக்கின்றனர். அதை நடத்திக்காட்டியது பா.ஜ.க. 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் முதல்வராக இருந்த ஒடிசாவில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறோம்.
கனிமொழி
தமிழ்நாட்டிலும் இது ஒருநாள் நடக்கும். 2026-ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமையும். ஒரு கட்சி மட்டும் ஆட்சியமைக்க முடியும் என்பதைத் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.2019-ல் தி.மு.க-வின் வாக்கு சதவிகிதம் 33.52 சதவிகிதம். அதே திமுக 2024-ல் 6 சதவிகிதம் குறைந்து 26.93 சதவிகிதத்துக்கு வந்திருக்கிறது.
அந்த 6 சதவிகிதம் எங்கள் பக்கம் வந்திருக்கிறது. தெற்கில் அரசியல் மாற்றம் வந்திருக்கிறது. பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. அதேபோல், இந்திய அளவில் நிறைய இடங்களில் வருவோம் என்று எதிர்பார்த்தோம். நான் சொல்வதெல்லாம் நடந்துவிட்டால் நான் கடவுளாகிவிடுவேன். நான் கடவுள் அல்ல சாதாரண மனிதன்." என்று கூறினார்.
இதை தொடர்ந்து கனிமொழியின் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, `என்னுடைய அப்பா அரசியல்வாதியல்ல. அதனால் நான் ஜெயிப்பதற்கு நேரமாகும். என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலக வேண்டும் என்று கனிமொழி கூறியிருக்கிறார். ஒருவேளை அவர் பா.ஜ.க-வுக்கு வருகிறாரென்றால் அதை நான் பரிசீலனை செய்கிறேன்" என்றார்.