சீனா போருக்காக என் பாட்டியும் நகை கொடுத்துருக்காங்க - அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளா - கர்நாடகா மாநிலத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
தாலி விவகாரம்
பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்து அதை மறுபங்கீடு செய்யும் என பகிரங்கமாக பேசியிருந்தார். இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டணங்களை தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, போர் நடந்தபோது, இந்திரா காந்தி தனது தாலி உட்பட அனைத்து தங்கத்தையும் நாட்டிற்காக தியாகம் செய்தார். என் தாய் தாலியை நாட்டிற்காக தியாகம் செய்தவர் என பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மோடி தாலியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தால், இப்படி பேசியிருக்க மாட்டார். பணமதிப்பு நடந்த போது, சேமிப்பு காலியான போது தங்கள் தாலியை பெண்கள் அடமானம் வைத்தனர். அப்போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? என்று வினவினார். மேலும், நாட்டி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, 600 விவசாயிகள் உயிரிழந்த போது, அந்த விதவைகளின் தாலி பற்றி மோடி நினைத்தாரா?" என்றும் ஆவேசமாக பிரியங்கா காந்தி பரப்புரையில் பேசினார்.
இந்நிலையில் தான் பிரியங்கா காந்தியின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பதிலடி கொடுத்துள்ளார். வயநாட்டில் பாஜக வேட்பாளரான கேரளா பாஜக தலைவர் சுரேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் அண்ணாமலை ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், சீன போரின் போது, 1962-இல் சீனா போர் நடப்பதற்கு யார் காரணம் - நேரு, இதே சீனா போருக்காக என் பாட்டியும் தான் நகை கொடுத்தாங்க, உங்க பாட்டியும் கொடுத்தாங்க, தமிழ்நாட்டில் அனைவருமே கொடுத்தோம்.