காலை உணவு திட்டம் பற்றி பரவிய அவதூறு ஆடியோ.. பெண் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்!
பெண் அதிகாரி ஒருவர் காலை உணவு திட்டம் குறித்து அவதூறு பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்று பெண் அதிகாரி ஒருவர் தவறான தகவலை பரப்பியுள்ளார்.
அதில், "வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க, சமையல் கேஸ், ரவா, சேமியா போன்ற பொருட்கள் தட்டுப்பாடு இருக்கிறது.. இப்போதைக்கு அந்த பொருட்கள் ஸ்டாக் இல்லை" என்று கூறியுள்ளார்.
சஸ்பெண்ட்
இதனை தொடர்ந்து, அவர் பேசியது, "அதனால், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஸ்பான்சர் பெற்று, உணவு தயாரியுங்கள், இதைவிட்டால் வேறு வழியில்லை, கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருக்கிறார்" என்று மேனகா பேசியது இணையத்தில் வைரலானது.
அதனை கேட்டதும் மாவட்ட கலெக்டர் கற்பகம், இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்ததுடன், இது தவறான தகவல் என்று உறுதிப்படுத்தினார். காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.