நடு இரவில் திருடனுடன் ஹோட்டலில் பெண் போலீஸ் - அதிகாலையில் அலறவிட்ட அதிகாரிகள்!
போலீஸ் அதிகாரி ஒருவர் திருடனுடன் தொடர்பில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் திருடன்
மும்பை புறநகர் ரயிலில் தினமும் ஏராளமான மொபைல் போன் திருட்டு நடந்துகொண்டிருக்கிறது. மும்பை கேர்வாடி போலீஸார் அந்த திருடனை தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சபீர் அலி என்ற அந்தத் திருடன் மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள மும்ப்ரா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே, மும்ப்ரா போலீஸ் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருபாலியிடம் அவரை கைது செய்ய உதவுவதற்காக கேட்டனர். ஆனால் அப்பொழுது அவர் லீவில் இருப்பதாக கூறிவிட்டார், பின்னர் போலீசார் அந்த திருடனின் செல்போனை ட்ரேஸ் செய்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
போலீசுடன் தொடர்பு
இந்நிலையில், அந்த திருடன் இரண்டு மாதத்தில் ஒரே நம்பரில் 100 முறைக்கும் மேல் சபீர் அலி பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போன் நம்பர் போலீஸ் அதிகாரி கிருபாலிக்குச் சொந்தமானது என்று கண்டுபிடித்த போலீஸார் இரண்டு பேரையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். கோரேகாவ் ஆரேகாலனி அருகே சென்றபோது சபீர் அலி தனது மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டான்.
உடனே கிருபாலியின் போன் எங்கிருக்கிறது என்று பார்த்தபோது அவரும் அதே பகுதியில்தான் இருந்தார். அவர்கள் பவாய் பகுதியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இரண்டு பேரும் காலை 6 மணிக்கு வெளியில் வந்தனர்.
உடனே சபீர் அலியை போலீஸார் கைதுசெய்தனர். அவனிடமிருந்து ஒன்பது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருபாலிக்கும் சபீர் அலிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மும்ப்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.