இன்ஸ்டாவில் நெருங்கி பழகி கள்ளக்காதலனை மணந்த பெண் - ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்!
இன்ஸ்டாவில் பழகிய நபரை மனைவி திருமணம் செய்ததால் கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கள்ளக்காதல்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் 47 வயதுடைய தொழிலாளி. அவரது மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியது.
இதனால் அந்த பெண் அடிக்கடி உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தன் கள்ள காதலனை சந்தித்து வந்துள்ளார். இந்த நடத்தையில் சந்தேகம் அடைந்த தொடர்ந்து தனது மனைவியை கண்காணித்து வந்தார். இந்த நிலையில், மதுரைக்கு சென்ற அந்த பெண் ஒரு வாரம் கழித்து நேற்று ஆரல்வாய்மொழிக்கு வந்துள்ளார்.
கணவர் செயல்
வீட்டுக்கு வந்த மனைவியிடம், அவர் கள்ளக்காதல் பற்றி கேட்க அவர்களுக்கிடையே தகராறு முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழவிக் கல்லால் மனைவியை தாக்கினார்.
அதில், அவருக்கு நெற்றி, மூக்கு, வாய் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அளித்து சென்றனர். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.