வேறு பெண்ணுடன் திருமணம் - கணவனுக்காக விபரீத முடிவு எடுத்த திருநங்கை
தகராறில் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
பண தகராறு
சேலத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (28). இவர் கிச்சி பாளையத்தைச் சேர்ந்த ராம் (25) என்கிற ராம்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு, ஸ்ரேயாவை விட்டு ராம் விலகிச் சென்றுள்ளார்.
இதனால் ஸ்ரேயா, ராம்குமாரிடம் செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஸ்ரேயாவை தாக்குயுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் மணமுடைந்த ஸ்ரேயா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலை
அவரை மீட்டு திருநங்கைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையில், மன உளைச்சலில் இருந்த ராம்குமார் மது அருந்திவிட்டு திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பேசிய திருநங்கைகள், ' ராம் ஏற்கனவே குண்டாஸில் கைதாகி சிறைக்குச் சென்று வெளியே வந்தவர். அவருக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்ரேயா தான் செய்தார்.
இந்த நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ராமின் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பணத்தையும் இழந்து தன்னை விட்டு நிரந்தரமாக ராம் பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஸ்ரேயா தற்கொலைக்கு முயற்சி செய்தார். ராம் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க கிச்சிபாளையம் போலீசார் முன்வர வேண்டும் ' எனத் தெரிவித்துள்ளனர்.