சர்க்கரை நோய் பாதித்த 2 மகள்கள் - ஆற்றில் வீசி கொன்று தற்கொலை செய்த தம்பதி!
2 மகள்களுக்கும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட நிலையில் தம்பதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரை நோய்
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ்(42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், இருவரும் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா என்ற நேகா (7), அக்ஷரா (5) என 2 மகள்கள் இருந்தனர்.
இந்த நிலையில் மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் நிதிஷாக்கு இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2வது மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பகீர் சம்பவம்
அதனால் மருத்துவமனியில் பரிசோதித்ததில் அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பது உறுதியானது. இதனால் மனமுடைந்த தம்பதி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில்
மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றுள்ளனர். அதனையடுத்து, 2 மகள்களையும் காவிரி ஆற்றில் வீசியுள்ளனர்.
அதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின் கணவன், மனைவி இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.